182
பிரதமர் நரேந்திர மோடி இன்று காஷ்மீர் மாநிலம் ஜம்மு செல்வதனை முன்னிட்டு, ஜம்முவில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது , ஜம்மு நகருக்கு செல்கினற் மோடி அங்கு இந்தியாவிலேயே மிக நீளமான சாலை வழி சுரங்கப்பாதைக்கான அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்த சுரங்கப்பாதையின் நீளம் 14 கி.மீ. ஆகும்.
இதனையடுத்து ஷெர்-இ-காஷ்மீர் வேளாண் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவிலும் பங்கேற்கவுள்ளார். இந்தநிலையில் மோடி வருகையை முன்னிட்டு, ஜம்முவில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக ஜம்மு மண்டல காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
Spread the love