Home இலங்கை “மே 18 புனிதத்தை பிரதிபலிக்கும் நாள்” சங்கக்காரவின் மனிதாபிமானம்..

“மே 18 புனிதத்தை பிரதிபலிக்கும் நாள்” சங்கக்காரவின் மனிதாபிமானம்..

by admin


“யுத்தத்தில் வாழ்க்கையை இழந்த இலங்கையர்களை நினைவுபடுத்தி பார்ப்பதற்க்கான, புனித பிரதிபலிப்புக்கான நாளே மே 18. எது சரி எது பிழை என்ற நியாயப்பாடுகளைத் தாண்டி நாங்கள் மற்றவர்களது வலியை உணர்ந்துகொள்வதற்காக எமது உள்ளத்தை திறந்து வைக்க வேண்டிய நாள் இது. ஒருவருக்கு ஒருவர் இதனைப் புரிந்துகொண்டால் இந்த வரலாறு மீளவும் ஏற்படாது.” என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்தவர்களை உலகம் நினைவுகூரும் நிலையில் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் டருவிட்டர் பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. முள்ளிவாய்க்கால் நினை தினம் அனுஷ்டிக்கப்படுவது குறித்து தென்னிலங்கையில் கடுமையான சர்ச்சைகளும் விவாதங்களும், இனவாதத்தை தூண்டும் கருத்துக்களும் வெளிவரும் சூழலில் தனது கருத்தை சங்கக்கார வெளிப்படுத்தியிருப்பது குறித்து பரவலான வரவேற்புகள் வெளியாகி வருகின்றன.

A day for for solemn reflection. To remember all Sri Lankan lives lost to war. To open our hearts so that we are able to feel another’s pain without judgement. To remain open to one another so that history never repeats itself.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More