குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
இலங்கை யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு குற்றம் சுமத்தவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேசிய வீரர்கள் தின நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய அவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து குறிப்பிடப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தரப்பினரும், அரசாங்கம் மற்றும் படையினருக்கு எதிரான தரப்பினரும் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், சில அரசியல்வாதிகளும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பயங்கரவாதி யார், படைவீரர் யார் என்பதனை அடையாளம் காணத் தவறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தாய் நாட்டுக்காக தைரியமாக உயிரைத் தியாகம் செய்த படைவீரர்களை அரசாங்கம் எப்பொழுதும் போற்றிப் புகழும் எனவும் படையினரை அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்வதனை எதிர்ப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
1 comment
Can he put his hand on his heart and say that there was no war crimes were committed by the SL forces? Who is he try to con. He was one of those who authorised the massacre and he also has to pay for what he has done and if not nirwarne will not be achieved in this birth.