பௌத்த மத தளங்களை பாதுகாப்பது தொடர்பில் விசேட சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக உயர்கல்வி மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பௌத்த மத முக்கியத்தும் வாய்ந்த மற்றும் தொல்பொருள் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இவ்வாறு சட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மத மற்றும் தொல்பொருள் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அழிக்க எத்தனிப்போருக்கு எதிராக கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அண்மையில் இபொல்கமவில் பௌத்த மத வழிபாட்டு சிறப்புமிக்க ஓர் பகுதி அழிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியிருந்தது எனவும் அந்த இடத்தை தாம் நேரில் சென்று பார்வையிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு குற்றம் இழைப்போருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.