இயற்கை அன்னையின் சீற்றத்தினால் ஏற்படும் பேரனர்த்தங்களில் எரிமலை உமிழ்வுகள் மோசமானவற்றில் முன்னணி வகிக்கின்றன. வெடித்துச் சிதறும் லாவா குழம்புகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு போதியளவு நேர அவகாசம் கிடைப்பதில்லை. இதன் காரணமாகவே எரிமலை வெடிப்புச் சம்பவங்களினால் பதிவாகும் உயிரிழப்பு எண்ணிக்கை மிக அதிகமாகக் காணப்படுகி;ன்றது. உடனடி ஆபத்துக்களுக்கு புறம்பாக எரிமலை உமிழப்படுவதனால் பல்வேறு கால நிலை சீர்கேடுகள் ஏற்படுகின்றன. இந்த நிலைமைகள் வழமைக்கு திரும்புவதற்கு பல ஆண்டுகள் காலம் எடுப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பேரனர்த்தத்தை ஏற்படுத்தக் கூடிய பத்து எரிமலை உமிழ்வுகள் தொடர்பில் கீழே விபரிக்கப்பட்டுள்ளது.
1. தாம்போரா எரிமலை, இந்தோனேசியா (1815ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 92000 மரணங்கள்)
இந்தோனேசியாவின் சும்பாவா மலைத் தொடரில் அமைந்துள்ள தாம்போரா எரிமலை கடலுக்கு மேல் 4300 அடி உயரத்தில் அமைந்துள்ளதாகவும், உலகின் முக்கியமான ஸ்டார்டோ எரிமலை எனவும் தெரிவிக்கப்படுகிறது. எரிமலை வெடிப்பு மானியில் இந்த சம்பவத்தின் அளவு 7 என பதியப்பட்டுள்ளது. எரிமலை வெடிப்பின் அனர்த்தங்கள் 1816ம் ஆண்டு வரையில் நீடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. காலநிலை மாற்றம், மினி சுனாமிகள், சாம்பள் துகள் மழை, பயிர்ச் செய்கை மற்றும் விலங்கு வேளாண்மையில் பாதிப்பு என பல்வேறு இடர்கள் ஏற்பட்டன.
2. க்ராகொட்டா எரிமலைத்தீவு, இந்தோனேசியா (1883ம் ஆண்டு ஆகஸ்ட் 36417 மரணங்கள்)
இந்N;தானேசியாவின் ஜாவா மற்றும் சுமத்திரா தீவுகளுக்கு இடையில் க்ராகொட்டா எரிமலைத் தீவு அமையப் பெற்றுள்ளது. 1883ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 மற்றும் 27ம் திகதிகளில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது. இந்த எரிமலை வெடிப்புச் சம்பவம் ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு நிகரானது என சுட்டிக்காட்டப்படுகிறது. எரிமலை வெடிப்பு மானியில் இந்த சம்பவத்தின் அளவு 6 என பதியப்பட்டுள்ளது. க்ராகொட்டா நகரின் மூன்றில் இரண்டு பகுதி முற்று முழுதாக அழிவடைந்தது. எரிமலை வெடிப்பினைத் தொடர்ந்து சுனாமி ஏற்பட்டது.
3. பீலி எரிமலை, மார்டின்கியூ (1902ம் ஆண்டு ஏப்ரல்-மே 30000 உயிரிழப்புகள்)
மார்டின்கியூவின் வடபகுதியில் பீலி எரிமலை அமைந்துள்ளது. பீலி எரிமலை உலகின் முக்கியமான ஸ்டார்டோ எரிமலைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இந்த அனர்த்தம் நிகழ்வதற்கு முன்னர் சென்ட் பீலி நகரம் மிகவும் சுபீட்சமானதும், விசாலமானதுமான நகரமாகக் கருதப்பட்டது. ஏப்ரல் மாதம் 25ம் திகதி முதல் இடம்பெற்ற எரிமலை வெடிப்புச் சம்பவங்களினால் பாரியளவிலான பேரனர்த்தம் இடம்பெற்றது.
4. ருயிஸ் எரிமலை, கொலம்பியா (1985ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 25000 மரணங்கள்)
கொலம்பியாவின் கல்டாஸ் பிரதேசத்தில் நிவாடோ நெல் ருயிஸ் அல்லது ருயிஸ் மலை அமைந்துள்ளது. 1985ம் ஆண்டு ருயிஸ் மலைத் தொடர் வெடித்துச் சிதறியதில் பாரியளவு அனர்த்தம் ஏற்பட்டது. இந்த வெடிப்பு, எரிமலை வெடிப்பு அளவீட்டு மானியில் மூன்றை பதிவு செய்திருந்தது. இந்த வெடிப்பின் பின்னர் சுமார் 150 ஆண்டுகளாக குறித்த எரிமலை உறங்கும் நிலையில் காணப்படுகின்றது.
5. அன்சென் மலை, ஜப்பான் (1732ம் ஆண்டு 14300 உயிரிழப்புகள்)
ஜப்பானின் கைய்யு_சூ தீவின் ஸிமாபாரா நகருக்கு அருகாமையில் இந்த அன்சென் எரிமலை அமைந்துள்ளது. கடந்த தசாப்தத்தில் இந்த எரிமலை மீண்டும் உயிர்த்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 1991ம் ஆண்டு இந்த எரிமலை வெடித்ததாகக் குறிப்பிடப்படுகிறது. எவ்வாறெனினும், 1732ம் ஆண்டு இடம்பெற்றதனைப் போன்ற அகோர அழிவுகள் இடம்பெறவில்லை. 1732ம் ஆண்டில் எரிமலை வெடிப்பு, நில அதிர்வு மற்றும் சுனாமி என பல இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டன. எரிமலை ஆய்வு செய்தவர்கள் மீண்டும் இவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெறக் கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
6. லாக்கீ, ஐஸ்லாந்து ( 1783ம் ஆண்டு 9350 மரணங்கள்)
லாக்கீ எரிமலைத் n;தாடர் லக்காஜிகார் எனவும் அழைக்கப்படுகின்றது. மிட்ரால்ஸ்ஜோக்குல் வாட்னா ஜோக்குல் ஆகிய பனிப்பாறைகளுக்கு இடையில் இந்த எரிமலை அமையப் பெற்றுள்ளது. கிறிஸ்துவுக்கு பின் 943ம் ஆண்டு பாரியளவில் எரிமலை உமிழ்வு இடம்பெற்றது. அதன் பின்னர் 1783ம் ஆண்டு மீண்டும் பாரிய பேரனர்த்தம் இடம்பெற்றது. பதினான்கு கன கிலோ மீற்றர் அளவிற்கு லாவா குழம்புகள் பரவியது.
7. கெல்யுட், இந்தோனேசியா (1919 ம் ஆண்டு 5110 மரணங்கள்)
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் இந்த எரிமலை அமையப் பெற்றுள்ளது. கிறிஸ்துவுக்கு பின் ஆயிரமாம் ஆண்டு முதலே எரிமலை வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குறைந்தபட்சம் 30 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. 1951, 1966 மற்றும் 1990ம் ஆண்டுகளில் இடம்பெற்ற எரிமலை வெடிப்புச் சம்பவங்களில் மொத்தமாக 250 பேர் கொல்லப்பட்டனர். எவ்வாறெனினும் 1919ம் ஆண்டு இடம்பெற்ற எரிமலை வெடிப்புச் சம்பவம் மாபெரும் பேரழிவினை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்pல் 5110 பேரின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.
8. காலுன்குங், இந்தோனேசியா (1882ம் ஆண்டு 4011 உயிரிழப்புகள்)
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா பகுதியில் 1882ம் ஆண்டு இந்த பாரிய அனர்த்தம் இடம்பெற்றது. காலுன்குங் எரிமலை தொடர்பில் மேற்குலக புவியியல் ஆய்வாளர்கள் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். எரிமலை எவ்வாறு உருவானது என்பது தொடர்பில் முரண்பட்ட கருத்து நிலவி வருகின்றது.
9. மவுன்ட் வெஸ்யூவிஸ், இத்தாலி (1631 டிசம்பர் 3500 உயிரிழப்புகள்)
நெப்பல் விரிகுடாவை அண்டிய பகுதியில் அமைந்துள்ள மவுன்ட் வெஸ்யூவிஸ் எரிமலை ரோம சாம்ராஜ்ஜிய காலம் முதல் உமிழ்வுகளை நிகழ்த்தி வருகின்றது. ஐரோப்பாவில் நீண்ட காலமாக செயற்பாட்டில் இருக்கும் ஒரே எரிமலையாக மவுன்ட் வெஸ்யூவிஸ் கருதப்படுகின்றது. 1631ம் ஆண்டு இடம்பெற்ற எரிமலை வெடிப்பினால் 3500 பேர் உயிரிழந்ததுடன், கிராமக் கட்டமைப்பும் முற்று முழுதாக அழிவடைந்தது. லாவா பிழம்புகளுக்கு மேலதிகமாக வெந்நீரும் வெளியானதாகவும், இதனால் சேதம் இரட்டிப்பாக உயர்வடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
10. மவுன்ட் வெஸ்யூவிஸ், இத்தாலி (கி.பி. 79 ஆகஸ்ட் 24ம் திகதி 3360 உயிரிழப்புகள்)
இத்தாலியின் நெப்பல் விரி குடா கரையோரப் பகுதியில் உயர்ந்த அழகிய தோற்றத்துடன்; மவுன்;ட் வெஸ்யூவிஸ் எரிமலை அமைந்துள்ளது. எழிலான தோற்றத்தை உடைய மவுன்;ட் வெஸ்யூவிஸ் எரிமலை பல தடவைகள் வெடித்துச் சிதறியது. கிறிஸ்துவுக்கு பின் 79 ஆண்டு இடம்பெற்ற பாரிய உமிழ்வினால் சுபீட்சமான இரண்டு இத்தாலிய நகரங்களான ஹெர்க்யூலெனியம் மற்றும் பொம்பீ ஆகிய நரங்கள் முற்று முழுதாக அழிவடைந்தன.
தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்….