குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இனம் மதம் பாராமல் இந்த சமூகத்தின் விடுதலைக்காக, சமூகத்தின் உரிமைக்காக, சமூகத்தின் அபிவிருத்திக்காக மேற்கொள்ளும் ஒவ்வொரு செயற்பாட்டையும் ஊடகங்களினூடாக பெரிது படுத்தி சிங்கள மக்கள் மத்தியில் ஒரு மோசமானவனாக காட்டுவதற்கு ஒரு சிலர் முயற்சிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியுதீன் தெரிவித்தார்.
நேற்று (20) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட முக்கியஸ்தர் உதுமான் ஹாஜியாரின் நிதியொதுக்கீட்டில் கண்டி, அக்குரனை, பானகமுவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள க- பானகமுவ முஸ்லிம் வித்தியாலய கட்டிடத் திறப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.