167
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஏழு ஆக உயர்வடைந்துள்ளது. நாட்டின் அநேக பகுதிகளில் பலத்த காற்றுடன் கடுமையான மழை பெய்து வருகின்றது. இடி மின்னல் தாக்கம், மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சிலர் உயிரிழந்துள்ளதுடன், சிலர் காணாமல் போயுள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் மேல் மழை பெய்துள்ளது. ரத்தினபுரி, நிதிவித்திகல, தெஹியோவிட்ட உள்ளிட்ட சில கல்வி வலயங்களின் பாடசாலைகள் இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love