வேலூர்மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள தோல் தொழிற்சாலைகளின் கழிவுகளை பெரியவரிகம் ஏரியில் கொட்டியதால் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதப்பதாகவும் இதனால் குடிநீர் மாசடைந்து காணப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சுமத்தியுள்ளனர். 350 ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்த பெரியவரிகம் ஏரியின் நீரினை மக்கள் குடிநீருக்காகவும் கால்நடைகளுக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
எனினும் ஆம்பூர் மற்றும் அதன் அருகில் சுற்றியுள்ள தோல் தொழிற்சாலைகளில் இருந்து தோல் மற்றும் கால்நடைகளின் ரோமக்கழிவுகள் ஏரியில் கொட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நீர் முழுவதும் மாசடைந்தது உபயோகத்திற்கே அற்ற நிலையில் உள்ளதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், இன்று அதிகளவில் தோல் கழிவுகள் தொழிற்சாலைகளால் ஏரியில் கொட்டப்பட்டுள்ளதனால் நீர் மாசடைந்து ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் உயிரிழந்து மிதப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அதிகாரிகள் இது போன்று குடிநீர் மாசுபடுத்தி ஏரியில் கழிவை கொட்டும் தோல் தொழிற்சாலைகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.