குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஆவா குழுவைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாண காவல்துறையினர் இ தெரிவித்துள்ளனர். போல் என்ற முக்கியஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் நீண்ட காலம் தேடப்பட்டு வந்த போல் வெனிஸ்டன் எனப்படும் போல் என்பவரையே இவ்வாறு கைது செய்துள்ளதாகவும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
காவல்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களை அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் இதற்கு முன்னர் சில சந்தர்ப்பங்களில் போலை கைது செய்ய எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்திருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தாவடியில் “ஒப்பரேசன் ஆவா” இளைஞரை துரத்திப்பிடித்தது காவற்துறை…
May 21, 2018 @ 21:58
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
நீர்வேலிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர என்ற சந்தேகத்தில் இளைஞரொருவர் யாழ். தாவடிப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகள் அதிகரித்த பின்னர், சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் தலைமையில் “ஒப்பரேஸன் ஆவா” என்ற பெயரில் அமைக்கப்பட்ட குழுவே, தமக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, இந்த இளைஞரை துரத்திப்பிடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 08 ஆம் திகதி நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலில் வைத்து 8 பேர் கொண்ட குழுவினருடன் இணைந்து இருவர் மீது சரமாரியாக வாளால் வெட்டிய சம்பவத்துடன் இவர் தொடர்புடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கைது செய்யப்பட்ட இந்த இளைஞரிடம் இருந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டதாகவும், விசாரணையின் பின்னர் யாழ்.நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் யாழ்ப்பாணம் காவல்துறையினர்; தெரிவித்துள்ளனர்.