168
புஸ்ஸல்லாவை காவல் நிலையத்தின் வளாகத்தில் கண்டி நுவரெலியா பிரதான பாதையில் நேற்று இரவு (21) பெய்த கடும் மழை காரணமாக பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் குறிப்பிட்ட நேரம் கண்டி நுவரெலியா பிரதான பாதையின் இருவழி போக்குவரத்து தடைபட்டிருந்தது. பாரிய மரம் ஒன்றும் பாதையின் குறுக்கே வீழ்ந்திருந்து.
இந்தநிலையில் புஸ்ஸல்லாவ காவல்துறையினரும் பொது மக்களும் இணைந்து பாதையை வழமைக்கு கொண்டு வந்துள்ளநிலையில் தற்போது பாதை இருவழி பாதையாக பயன்படுத்தபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love