புதிய மாற்றங்களுடன் உருவான பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை சோதனை நேற்றையதினம் வெற்றிகரமாக மேற் கொள்ளப்பட்டுள்ளது. இந்திய – ரஷ்ய கூட்டுத் தயாரிப்பில் உருவான இந்த ஏவுகணை, ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் இருந்து நேற்றுக் காலை இலக்கை நோக்கி செலுத்தப்பட்டு இலக்கை துல்லியமாக தாக்கி சோதனை வெற்றி பெற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது
ஏவுகணையின் ஆயுளை அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள் இந்தியா வில் முதல்முறையாக ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பிரம்மோஸ் குழுவால் மேம்படுத்தப்பட்டன எனவும் இந்த ஏவுகணையை வானம், கடல் மற்றும் கடலுக்கு அடியிலிருந்து செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்திய ஆயுதப் படை கிடங்குகளில் உள்ள ஏவுகணைகளை மாற்றியமைக்கும் செலவு பெருமளவு சேமிக்கப்படும் என இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.