157
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காவற்துறைப்பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் உந்துருளியில் பயணித்த இளைஞர் மீது விசேட அதிரடிப்படையினரின் வாகனம் மோதியதனால், அந்த இளைஞர் படுகாயம் அடைந்து புதுக்குடியிருப்பு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த விபத்துக் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love