184
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கூறப்படும் அதிகாரிகளின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை திணைக்களத்தில் ஆணையாளராக கடமையாற்றிய எமில் ரஞ்சன் லமாஹேவா மற்றும் காவல்துறை போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் காவல்துறை பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ ஆகியோர் கடந்த மார்ச் மாதம் 28ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த இருவரினதும் விளக்க மறியல் காலத்தை நீதிமன்றம் நீடித்துள்ளது. வெலிக்கடைச் சிறைச்சாலை தாக்குதல் சம்பவத்தில் பெரும் எண்ணிக்கையிலான கைதிகள் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love