185
ரஸ்யாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான இங்கிலாந்து அணியின் தலைவராக ஹரி கன் (Harry Kan) நியமிக்கப்பட்டுள்ளார். ஜூன் 14-முதல் ஜூலை 15ம் திகதிவரை வரை உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற உள்ளநிலையில் இதில் 32 அணிகள் போட்டியிடவுள்ளன.
அந்தவகையில் ஒவ்வொரு நாடும் தங்களது அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளநிலையில் இங்கிலாந்து அணி அணியின் தலைவராக ஹரி கனை நியமித்துள்ளது. ஹரி கன் இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரில் ரொட்டன்ஹாம் ஹட்ஸ்பர்(Tottenham Hotspur) அணிக்காக விளையாடி இந்த பருவகாலத்தில் 30 கோல்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love