145
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் பனாமா சிட்டியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று காலை 49 வயதான கெவின் ஹல்ரய்டு என்ற நபர் தனது கையில் இருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சரமாரியாக சுடத் தொடங்கியதனையடுத்து அப்பகுதியில் உள்ளவர்கள் காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் குறித்த நபரை கைது செய்ய முயன்ற போதும் அவர் தொடர்ந்து துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதனால் அவரை சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love