யுத்தத்தின் போது கொல்லப்பட்ட பொதுமக்களே வடக்கில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் நினைகூரப்பட்டனர் எனவும் விடுதலைப்புலிகளை எவரும் கௌரவிக்கவில்லை எனவும், பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வடக்கில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு குறித்து, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள சரத்பொன்சேகா, கடந்த காலங்களில் யுத்தத்தை வெற்றிபெற்ற வீரர்ககளிற்கு உரிய இடத்தை வழங்காதவர்கள் தற்போது முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதிக்கு பயங்கரவாதம் செயற்படும் முறை குறித்து தெரியாது எனக் குறிப்பிட்ட அவர், இனவாதத்தை தூண்டும் நடவடிக்கையில் மாத்திரம் ஈடுபட்டுள்ளதாகவும், அரசாங்கத்திற்கு எதிராக அறிக்கைகளை விடுவதன் மூலம் மகிந்த ராஜபக்சவும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் மக்களை தூண்டிவிடப்பார்க்கின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.