174
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி 1986ஆம் ஆண்டு க.பொ.த(உ/த) பிரிவினரால் அன்பளிப்புச் செய்யப்பட்ட இரண்டு பாரிய நவீன குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி திறப்பு விழா இன்று கல்லூரி அதிபர் சதா நிமலன் தலைமையில் காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகியது.
மேற்படி நிகழ்வுக்கு அன்பளிப்புச் செய்த மாணவர்களின் புகழ் பூத்த முன்னை நாள் கணித ஆசான் முத்து நடராஜாவும் அவரது பாரியாரும் கலந்து சிறப்பித்தனர். 1986 ஆம் ஆண்டு பழைய மாணவர்கள் சார்பில் வைத்திய கலாநிதி பூ.லக்ஸ்மன் மற்றும் வைத்திய கலாநிதி ஸ்ரீ P.கோணேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 1986 ஆம் ஆண்டு க.பொ.த(உ/த) பிரிவு கே.ரீ கோணேஸ்வரன் அவர்களின் பெரும் ஒத்துழைப்பில குறித்த திட்டம் செயற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் அடிப்படைத் தேவையினை பூர்த்தி செய்த பழைய மாணவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாகவும் அனைவராலும் நன்றியும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது.
Spread the love