161
இங்கிலீஷ் பிரீமியர் லீக்கி்ல் விளையாடும் முன்னணி கால்பந்து அணிகளில் ஒன்றான அர்சனல் அணியின் புதிய பயிற்சியாளராக உனை எமெரி (Unai Emery) நியமிக்கப்பட்டுள்ளார். 22 வருட காலமாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக கடமையாற்றிவந்த அர்சென் வெங்கர் விலகியதனையடுத்து உனை எமெரி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்பெயினைச் சேர்ந்த 46 வயதான எமெரி 2013 முதல் 2016 வரை செவியா அணிக்காகவும், 2016 முதல் 2018 வரை பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காகவும் தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love