162
அமெரிக்க மற்றும் வடகொரிய ஜனதிபதிகளுக்கிடையிலான சந்திப்புக்காக 15 பேர் கொண்ட வடகொரிய குழு சிங்கப்பூர் செல்ல ஐ.நா. பாதுகாப்பு பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுக்கும் இடையில் ஜூன் மாதம் 12-ம் திகதி சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது
இந்நிலையில் குறித்த சந்திப்பின் போது இடம்பெறவுள்ள 15 பேர் கொண்ட வடகொரியா அதிகாரிகளின் குழு சிங்கப்பூர் செல்ல அனுமதி கோரி ஐநா சபை பாதுகாப்பு பேரவைக்கு அனுப்பி வைத்த கடிதத்தை பரிசீலித்த ஐ.நா. பாதுகாப்பு பேரவை நேற்றையதினம் ஒப்புதல் அளித்துள்ளது
Spread the love