குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
லெபனான் பாராளுமன்றின் புதிய சபாநாயகராக மீளவும் நய்பா பெரீ (Nabih Berri) நியமிக்கப்பட்டுள்ளார். பெரீ, ஈரானிய ஆதரவு ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் மிக நெருங்கிய சகா என்பது குறிப்பிடத்தக்கது. லெபனான் பாராளுமன்றில் ஏகமனதாக எதிர்வரும் ஆறு ஆண்டுகளுக்கு பெரீ சபாநாயகர் பதவியை வகிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் மற்றுமொரு நெருங்கிய சகாவான எளீ ப்ரீசிலி பிரதி சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார். லெபனானின் அடுத்த பிரதமர் சாட் அல் ஹரீரீ நியமிக்கப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. நாளைய தினம் ஜனாதிபதி மிச்சேல் அவுனின் தலைமையில் கூடும் பாரர்ளுமன்றம் பிரதமர் யார் என்பதனை நிர்ணயம் செய்ய உள்ளது. பாராளுமன்றில் அதிக ஆதரவு நபரை ஜனாதிபதி பிரதமர் பதவியில் அமர்த்துவது அந்நாட்டு நியதிகளில் ஒன்றாகும்.