குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இங்கிலாந்தில் நீர்த் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2050ம் ஆண்டளவில் இங்கிலாந்தில் தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பயன்பாட்டை குறைக்காமை மற்றும் கழிவு முகாமைத்துவத்தை உரிய முறையில் மேற்கொள்ளத் தவறுதல் ஆகியனவற்றின் அடி;பபடையில் நீர் வளம் குறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் நீர் விரயமாக்கப்படுதனால் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் எதிர்காலத்தில் நீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீடுகளிலும் மிகுந்த கவனத்துடன் நீரைப் பயன்படுத்த வேண்டுமென சுற்றாடல் ஆய்வாளர்கள் கோரியுள்ளனர். நாள் ஒன்றுக்கு மூன்று பில்லியன் லீற்றர் நீர் இங்கிலாந்தில் சராசரியாக விரயமாக்கப்படுகின்றது என தெரிவித்துள்ளனர்.