தமிழில் குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்த ஆவணங்களை அழித்தமையின் ஊடாக பிரித்தானியா எதனைறும் மூடி மறைக்க முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்டங்களை தொடங்கிய காலம் முதலான ஆவணங்களை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு அண்மையில் அழித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான சுமார் 200 ஆவணங்கள் இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளன. இந்த ஆவணங்க்ள அழிக்கப்பட்டமைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் யுனெஸ்கோ நிறுவனத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் நிபுணர் Dr Rachel Seoighe, இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
உலக உரிமைகளை பாதுகாக்கும் நிறுவனமான யுனெஸ்கோவிடம் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது பிரித்தானியா இலங்கையுடன் எவ்வாறான தொடர்புகளைப் பேணியது என்பது குறித்த விடயங்கள் மர்மமாகவே நீடித்து வருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கென்யாவில் இடம்பெற்ற வன்முறைகள் அடக்குமுறைகளை மூடி மறைக்கும் நோக்கில் பிரித்தானிய அரசாங்கம் ஆவணங்களை அழித்திருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது கடத்தல்கள், காணாமல் போதல்கள், சித்திரவதைகள் இடம்பெற்றுள்ள நிலையில் இதற்கு பிரித்தானியா உதவியதா என்பதனை மக்கள் அறிந்து கொள்ள விரும்புவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்ட சம்பவம் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டுமென தமிழ் தகவல் மையத்தின் நிறைவேற்றுச் செயலாளர் வைரமுத்து வரதகுமார் தெரிவித்துள்ளார். இலங்கைப் படையினருக்கு பயிற்சி அளித்தல் வேறும் வழிகளில் உதவியமை போன்ற விடயங்கைள மூடி மறைக்கும் நோக்கில் ஆவணங்கள் அழிக்கப்பட்டதா என்ற கேள்வியை மக்கள் எழுப்பி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..