146
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி இன்று அறிவித்துள்ளார். இன்று தூத்துக்குடியில் அமைதிக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இந்த அறிவிப்பை வெளியிட்டார். இனி ஸ்டெர்லைட் ஆலை செயல்பட முடியாது என தெரிவித்த அவர், தூத்துக்குடியில் அமைதி திரும்ப மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுதுள்ளார்.
Spread the love