மலேசியாவில் போதைப்பொருள் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண்ணுக்கு விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 54 வயதான மரியா எக்ஸ்போஸ்டோ என்னும் 3 பிள்ளைகளின் தாயான பெண்ணுக்கே இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆண்டு டிசம்பர் மாதம் ஷாங்காய் நகரில் இருந்து மெல்பேர்ன் நகருக்கு போதைப்பொருள் கடத்த முயற்சி செய்ததாக மலேசிய விமான நிலையத்திள் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். இவரிடமிருந்து ஒரு கிலோவுக்கும் அதிகமான தடை செய்யப்பட்ட போதைப்பொருள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குற்றந்நாட்டினை மறுத்த குறித்த பெண் அதனை தனது இணைய நண்பர் ஒருவர் தன்னிடம் கொடுத்து, குறிப்பிட்ட ஒரு நபரிடம் கொடுக்குமாறு வேண்டிக்கொண்டதை அடுத்து அந்த பையை எடுத்து வந்ததாகவும், அந்த பையை தன்னிடம் கொடுத்த நபர் ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வரும் அமெரிக்க ராணுவ வீரர் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், போதைப்பொருள் கடத்திய வழக்கில் மரியாவுக்கு மரண தண்டனை விதித்து மலேசிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக மரியாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது