குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடகொரியாவின் அணுவாயுத பரிசோதனை சுரங்கம் அழிக்கப்பட்டுள்ளது. பிராந்திய வலயத்தில் நிலவி வரும் பதற்றங்களை தணிக்கும் நோக்கில் இவ்வாறு வடகொரியாவின் அணுவாயுத பரிசோதனை சுரங்கம் அழிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள புன்கேஜி -ரி ( Punggye-ri ) அணுவாயுத பரிசோதனை வலயமே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் பாரிய வெடிப்புச் சத்தம் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் வடகொரியா அணுத் திட்ட பரிசோதனை நடத்தப்படும் தளத்தை அழித்து விட்டதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுடன் ரஜதந்திர ரீதியிலான பிணைப்பினை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் வடகொரியா இந்த அணுவாயுத பரிசோதனை மையத்தை அழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை அணுத் திட்ட தளம் அழிக்கப்பட்டதனை கண்காணிப்பதற்கு சுயாதீன ஆய்வாளர்களுக்கு இன்னும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை இந்த அழிவு தொடர்பில் பார்வையிடுவதற்கு சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிந்தமை குறிப்பிடத்தக்கது