153
வாகரை காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட கதிரவெளியில் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தமது வீட்டுத் தோட்டத்தில் குப்பைகளை புதைக்க நிலத்தை தோண்டியபோது நிலத்திலிருந்து மர்ம பொதியொன்று இருப்பதை அவதானித்துள்ளார். அது வெடிபொருளாக இருக்கலாம் என சந்தேகம் கொண்ட அவர், இத் தகவலை அருகிலுள்ள காவல் நிலையகத்துக்கு அறிவித்ததையடுத்து, குறித்த இடத்திற்கு சென்ற காவற்துறையினர் அப் பொதியை சோதனையிட்ட போதே மேற்படி ரி 56 ரக துப்பாக்கியை மீட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love