134
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு செல்ல உள்ளார். வடக்கின் அபிவிருத்தித் திட்ட முன்னெடுப்புக்கள் குறித்து கண்காணிக்கும் நோக்கில் பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்கின்றார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளுக்கு பிரதமர் இவ்வாறு நாளை மறுதினம் விஜயம் செய்ய உள்ளார். கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டச் செயலகங்களில் அபிவிருத்தி திட்ட செயற்குழுக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்தக் கூட்டங்களிலும் பிரதமர் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love