147
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
வலிவடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து 36 ஏக்கர் பரப்பளவு காணி மக்களின் பாவனைக்கு இன்று கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜே /233 கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட மாம்பிராய் மாங்கொல்லை பகுதிகளே இவ்வாறு மீள் குடியேற்றத்திற்கு கையளிக்கப்பட உள்ளன. 85 குடும்பங்களுக்குச் சொந்தமான 36 ஏக்கர் காணித்துண்டுகள் இதற்குள் அடங்கியுள்ளன. காணி உமையாளர்களை இன்று சனிக்கிழமை தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு நேரில் சமூகமளிக்குமாறு பிரதேச செயலாளர் சிவசிறீ கேட்டுக்கொண்டுள்ளார்.
Spread the love