குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
வலி வடக்கில் இன்று 36 ஏக்கர் பரப்பளவுள்ள காணி பாதுகாப்பு தரப்பினரால் விடுவிக்கப்பட்டள்ளது. விடுவிக்கப்பட்ட காணிகள் இப்பிலிப்பிலி மரங்களால் மூடப்பட்டு இருந்ததாக தெரிவிக்கும் மக்கள், தமது வீடுகளை, வீதிகளை, அடையாளம் காணமுடியாதிருந்ததாக கூறுகின்றனர். இதனால் இராணுவத்தினர் பயன்படுத்திய தனியார் காணியூடாகவே தமது வாழ்விடங்களுக்கு சென்றதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஜே / 233 கிராம அலுவலர் பிரிவிவுக்கு உட்பட்ட மாம்பிராய், மாங்கொல்லை பகுதிகளைச் சேர்ந்த 85 குடும்பங்களுக்கு சொந்தமான 36 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டதாக தெல்லிப்பளை பிரதேச செயலர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் காடுகளாக மாறி இருக்கும் தமது காணிகளை மீண்டும் வாழ்விடங்களாக மாற்றுவதற்கும், மீள் குடியேறுவதற்கும், மீள் குடியேற்ற செயலணி அதிகாரிகள் தமக்கு உதவி செய்ய வேண்டும் என மக்கள் கோரி உள்ளனர்.
படங்கள் செல்வநாயகம் நிரூஜன்