பிரிட்டிஷ் கவுன்சிலின் முதலாவது குளோபல் அலுமினி விருது (Global Alumni Awards) வழங்கலில் இலங்கையின் கடல் வாழ் உயிரியல் நிபுணரான ஆஷா டி வோஸ் தொழில்முறை சாதனை விருதை பெற்றுள்ளார்.
ஆஷா டி வோஸ் கடல் வாழ் பாலூட்டிகள் ஆராய்ச்சி சம்பந்தமாக பிஎச்டி (PhD) பட்டம் பெற்ற முதலாவது இலங்கையர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஷா டி வோஸ், இறுதி 62 பேரில் இருந்து தெரிவு செய்யப்பட்டது மட்டுமன்றி, பிராந்திய வெற்றியாளர்கள் 21 பேரில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டு, ஐக்கிய இராச்சியத்தின் குளோபல் அலுமினி விருது பெறும் இறுதி மூன்று நபர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டார்.
இந்த விருதுக்காக ஐக்கிய இராச்சிய பல்கலைக்கழகங்களின் அனைத்து பழைய மாணவர்களும், மூன்று நாடுகளையும் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள நான்கு உயர் கல்வி நிறுவனங்களையும், தொழில் சார் நிபுணர்கள் பிரதிநிதித்துவம் செய்திருந்தனர்.
இலங்கையைச் சேர்ந்த ஆஷா டி வோஸ் கடல் சார் கல்வியியலாளர் மற்றும் வட இந்திய கடலில் நீலத்திமிங்கிலம் சம்பந்தமான ஆராய்ச்சியில் முன்னோடியாக அறியப்படுகிறார்.