வடகொரிய ஜனாதிபதி; கிம் ஜொன் உன் தென்கொரியா ஜனாதிபதி; மூன் ஜே-வை இன்று இரண்டாவது சந்தித்துப் பேசியுள்ளார். ஜூன் 12ஆம் திகதி சிங்கப்பூரில் நடைபெறவிருந்த உச்சிமாநாட்டை ரத்து செய்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், மீண்டும் அது நடக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருந்த நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது
ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் உள்ள, கூட்டு பாதுகாப்பு பகுதியில் உள்ளூர் நேரப்படி மாலை மூன்று மணி முதல் ஐந்து மணி வரை இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது என மூனின் அலுவலகம் தெரிவித்துள்ளது. வட கொரியா – அமெரிக்கா உச்சி மாநாடு வெற்றிகரமாக நடைபெறுவது குறித்து இருநாட்டு தலைவர்களும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
திட்டமிட்டப்படி வட கொரிய – அமெரிக்க ஜனாதிபதிகளுக்கிடையில் ; பேச்சுவார்த்தை நடைபெற்றால், கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை குறைப்பது குறித்தும் அணு ஆயுதங்களற்ற கொரிய தீபகற்பம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.