174
தமிழகம் தூத்துக்குடியில் காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதிவேண்டி யாழ்ப்பாணத்தில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்.நகர பேருந்து நிலையம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தூத்துக்குடி மக்களின் போராட்டத்தை காவவற்துறையினர் துப்பாக்கியைப் பயன்படுத்தி அடக்க முயற்சித்தமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மிக வன்மையாகக் கண்டித்தனர்.
தமிழகம் தூத்துக்குடியில் ஸ்ரெலைட் ஆலையை மூட வலியுறத்தி மக்களால் நடத்தப்படும் மாபெரும் போராட்டத்தின நூறாவது நாளான கடந்த செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதன்போது தமிழகப் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மாணவி உள்பட 12 பேர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தார். பலர் படுகாயமடைந்தனர்.
படங்கள்: ஐ.சிவசாந்தன்
Spread the love