இலங்கை பிரதான செய்திகள்

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கையின் கடமை..

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கைக்குரிய விடயம் என இலங்கைகான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கின்ற அதேவேளை இன்னமும் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் உள்ளன எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: பிரகாசமான எதிர்காலம் என்ற இலங்கையின் கனவை நனவாக்குவதற்காக இலங்கையுடன் கைகோர்த்து பயணிப்பதற்கு அமெரிக்கா விரும்புகின்றது. இலங்கையின் நல்லிணக்க முயற்சிக்கு இலங்கையே தலைமை தாங்கவேண்டும், காயங்களை ஆற்றக்கூடிய பிரகாசமான எதிர்காலத்திற்கு வழிவகுக்ககூடிய நல்லிணக்க முயற்சியை இலங்கையே முன்னெடுக்க வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது என அமெரிக்கா மாத்திரமல்ல இலங்கையும் ஐநா செயற்பாடுகள் மூலம் உறுதிவழங்கியுள்ளது. இலங்கை வெற்றியடையவேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம்,இலங்கையுடனான எங்கள் உறவுகள் விஸ்தரிக்கப்படுவதற்காக பெருமளவு முதலிட்டுள்ளோம்.

இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கின்றது அதேவேளை இன்னமும் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் உள்ளன. இலங்கை யுத்தத்திற்கு பிந்திய காலத்திற்குள் நுழையும் இந்த தருணத்தில் ஜனநாயகத்தை பலப்படுத்தும் இந்த வேளையில் வாக்குறுதி அளிக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்றும் பொறுப்பு இலங்கையுடையது.

2016 ம் ஆண்டு சுதந்திரக்கொண்டாட்டங்களை பார்வையிடுவதற்கு சந்தர்ப்பங்கள் கிடைத்த சிலரில் நானும் ஒருவன். தேசிய கீதம் சிங்களத்தில் இசைக்கப்பட்டவேளை வளர்ந்தவர்கள் கூட கண்ணீர் விடுவதை மாத்திரம் நான் பார்க்கவில்லை, ஐம்பது வருடத்திற்கு பின்னர் அரச நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுவதை பார்த்து கண்ணீர் சிந்தப்படுவதையும் நான் பார்த்திருக்கின்றேன்.

இதுவே நல்லிணக்கத்தின் பலம், மிக மோசமான துயரம் மற்றும் மனவேதனைகளிற்கு பின்னர், காயங்கள் ஆற்றப்படுவதன் பலம் இது. நாங்கள் சமமான வாய்ப்புகளையே கோருகின்றோம். நாங்கள் மிக நீண்ட காலமாக இந்தோ பசுபிக்கில் நிலை கொண்டுள்ளோம். நாங்கள் வெளிப்படையான சுதந்திரமான இந்தோ பசுபிக்கினை விரும்புகின்றோம்.அனைவருக்கும் பலனளிக்க கூடிய சர்வதேச முறையை நாங்கள் விரும்புகின்றோம். எனத் தெரிவித்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.