இலங்கையுடானான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்துவது குறித்து இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் பல அண்மைக்காலமாக தீவிரமாக செயற்பட ஆரம்பித்துள்ளன. இந் நிலையில் அமெரிக்கா தலைமையில் ஹவாய் தீவு பகுதிகளில் இடம்பெறும் முக்கிய நாடுகளின் கூட்டு பயிற்சிக்கு இலங்கைக்கு முதற்தடைவாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அமெரிக்காவின் கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் முதல்முறையாக இலங்கை பங்குப்பற்ற உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கூட்டு பயிற்சி இடம்பெறுகின்றது.
இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான், கனடா உள்ளிட்ட 20ற்கும் மேற்பட்ட நாடுகள் இந்த கூட்டு பயிற்சியில் பங்கேற்க உள்ளன. ஜுன் மாதம் 27ஆம் திகதி ஆரம்பிக்கும் இந்த கூட்டு பயிற்சி தொடர்ந்தும் இரண்டு நாட்களுக்கு இடம்பெற உள்ளன.
இதனடிப்படையில் இலங்கை கடற்படையின் சிறப்பு தாக்குதல் படைப்பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்ட சிப்பாய்கள் ஹாவாய் தீவிற்கு செல்ல உள்ளனர். கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை குறித்து இன்னும் தீர்மானிக்க வில்லை என கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.