164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிற்கு அனைவரும் அஞ்சுகின்றனர் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். கோதபாய ஆட்சிக்கு வந்தால் சிக்கல் என அனைவரும் அஞ்சுகின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
பேய்களுக்கு அனைவரும் பயம் எனவும், குண்டை கட்டிக் கொண்டு வருபவருக்கு அனைவரும் பயம் எனவும் அவ்வாறே கோதபாயவிற்கும் அனைவரும் பயம் எனவும் தெரிவித்துள்ளார். வெள்ளைவான் குற்றச் செயல்களுடன் கோதபாயவிற்கு தொடர்பு உண்டு என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா நேரடியாகவே குற்றம் சுமத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love