224
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வருபர்களில் யோகி பாபு தனது உடல்மொழியின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் இவர் கோலமாவு கோகிலா. என்னும் திரைப்படத்தில் நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன் தாராவை நாயகியாகக் கொண்டு வெளிவரவுள்ள இந்தப் படத்தில் சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா ஆகியோர் நடிக்கின்றார். இந்தப் படத்தில் நயன்தாராவை, யோகிபாபு காதலிப்பது போன்று பாடல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கல்யாண வயசு என்று தொடங்கும் ஏனம் பாடலிலேயே யோகிபாபுவும் நயன்தாராவும் நடித்துள்ளனர். குறித்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்பாடல் குறித்து கூறிய யோகிபாபு
“நயன்தாராவை ஒருதலையாக காதலிக்கும் மளிகைக் கடைக்காரராக நடித்துள்ளேன். படம் முழுக்க நயன்தாராவை சைட் அடித்துக்கொண்டே இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக, ஒரு நடிகையுடன் பேருந்தில் டான்ஸ் ஆடுவது, பாடுவது என்று காட்சிகள் எடுத்த போது, அந்த நடிகை என்னை தொட்டு நடிக்கவே மறுத்துவிட்டார். அப்படியிருக் கும் போது, நயன்தாராவுக்கு உண்மையில் பெரிய மனசு தான். ”
என்று கூறியுள்ளார். இதேவேளை இப்பாடலை பார்த்துவிட்டு நடிகர் விஜய் , யோகி பாபுவை பாராட்டியுள்ளார். அத்துடன் அஜித்திடம் அந்தப் பாடலை காண்பித்து அவரிடமும் பாராட்டு வாங்கயிருக்கிறார் யோகிபாபு.
https://youtu.be/iPimqm8a1Nk
Spread the love