172
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாண ரீதியில் வலைய மட்ட பாடசாலைகளுக் கிடையில் ஞாயிற்றுக்கிழமை (27) யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற தமிழ் தினப்போட்டியில் ” சமூக நாடகத்தில்” முதல் இடத்தினை மன்னார் அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை பெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வடமாகாண பாடசாலைகளுக் கிடையிலான தமிழ் தின போட்டியில் இடம் பெற்ற நாடக போட்டியில் முதலாமிடத்தினை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் இருந்து வடமாகாணத்தில் நாடகப் போட்டியில் முதலாம் இடத்தினை மன்னார் அல்-அஸ்ஹர் ம.வி பெற்றுக் கொண்டது இதுவே முதல் தடவை. குறித்த பாடசாலை மாணவர்கள் தேசிய மட்டப்போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love