வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் இரு காற்றழுத்த தாழ்வு நிலைகள் நிலவுவதால், வரும் 31-ம் திகதிவரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென்மேற்கு பருவமழையின் முன்னேற்றத்தால் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் கேரளா, கர்நாடக கடற்கரை பகுதியில் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து நிலவுகிறது. அடுத்து வரும் 24 மணி நேரத்தில், கேரளா மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.
எனவே, மீனவர்கள் மே 31-ம் திகதி வரை குமரிக்கடல், கேரளா மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு, மத்திய கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார்