நியூசிலாந்தில் கொடூரமான பக்ரீரியா தாக்குதலுக்கு உள்ளான 1லட்சத்து 50 ஆயிரம் பசுக்களை கொல்ல அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. குறித்த பக்ரீரியா தாக்குதலால் பால் பொருட்களுக்கு பாதிப்பு இல்லை என்ற போதிலும், இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்படுகிறது.
உலக அளவில் பால் பண்ணை தொழிலில் முக்கிய இடம் வகித்து வருகின்ற நியூசிலாந்தில் உள்ள ஏராளமான பால் பண்ணைகளில் 10 லட்சம் மாடுகள் உள்ளன. பால் பொருட்கள் ஏற்றுமதியின் மூலம் அந்நாடு குறிப்பிடத்தக்க அளவு வருவாய் ஈட்டி வருகிறது.
இந்நிலையில் கடந்த வருடம் ஐரோப்பிய நாடுகளில் பரவிய மைக்கோபிளாஸ்மா போவிஸ் என்ற பக்ரீரியா தற்போது நியூசிலாந்திலும் பரவியுள்ளது. இதனால் பாதிப்பு ஏற்பட்டு பசுக்கள் உயிரிழக்கின்றன. இந்த பக்ர்Pரியாவினால் பாதிக்கப்பட்ட பசுக்களின் பால் பொருட்களை சாப்பிடுபவர்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படவில்லை என’;ற போதிலும் இந்த பக்ர்Pரியா ஏனைய கால்நடைகளுக்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதனை கட்டுப்படுத்த நியூசிலாந்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் இதனை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதனாலும் பக்ரீரியா வேகமாக பரவி வருவதாலும் பாதிக்கப்பட்ட மாடுகளை கொல்ல அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்த பசுக்களை கொன்று அதன் உடலை எரித்து விட திட்டமிடப்பட்டுள்ளது