குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
பணத்தை பயன்படுத்தாவிட்டால் வேறு பகுதிக்கு வழங்கப்படும்…
கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதா? இல்லையா என்பதனை நீங்களே தீர்மானியுங்கள். உங்களின் யாழ் நகருக்கு குடிதண்ணீர் வழங்குவதா? இல்லையா என்பது தொடர்பில் நீங்களே முடிவெடுங்கள்.
இவ்வாறு பிரதமமந்திரி றணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற அபிவிருத்தி தொடர்பான கலந்தரையாடலில், யாழ் நகருக்கான குடிதண்ணீர் தேவை மற்றும் கழிவகற்றல் தொடர்பில், யாழ் மாநகர மேயர் ஆனோல்ட்டால் சுட்டிக்காட்டப்பட்டது.
இதன்போது கடல் நீரை நன்னீராக்கும் மாற்று திட்டம் தொடர்பில் இதன்போது கருத்து தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான ஆய்வு அறிக்கைகளின்படி ஆயிரம் லீற்றருக்கு 90 ரூபாய் செலவாகும் என திட்டப் பணிப்பாளரினால் சுட்டிக்காட்டப்பட்டது. இது மலிவானது என சுட்டிக்காட்டிய பிரதமர் நடைமுறைப்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த அப்பகுதி மக்களும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனும் எதிராக உள்ளதாக மாகாண சபை உறுப்பினர் எம். சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
குடிதண்ணீர் யாழ் நகர மக்களுக்கு தேவை. ஆந்தப்பகுதி மக்கள் அதற்கு எதிர்கப்பு தெரிவித்தால் வேறு பொருத்தமான இடங்களை தெர்வுசெய்யலாம். இதனை நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்பது பற்றி நீங்களே முடிவு செய்யுங்கள்.பணத்தை நீங்கள் பயன்படுத்தாவிட்டால் வேறு இடத்திற்கு அதனை நாங்கள் வழங்குகிறோம் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.