குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பெல்ஜியத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் பெண் காவல்துறை உத்தியோகத்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெல்ஜியத்தின் கிழக்கு நகரான லியேஜில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் நான்கு காவல்துறை உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதுடன், தாக்குதல்தாரி காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இந்த தாக்குதலை நடத்தியவரின் நோக்கம் கண்டறியப்படவில்லை என்ற போதிலும், தாக்குதல் சம்பவத்தை ஓர் தீவிரவாத தாக்குதலாகவே நோக்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அல்லாஹூ அக்பர் எனக் கூறிக்கொண்டே குறித்த நபர் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த நபர் போதைப் பொருள் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெல்ஜியத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு காவல்துறையினர் பலி
May 29, 2018 @ 15:21
பெல்ஜியத்தின் லீய்ஜ் நகரில் இனந்தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இரு காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் காவல்துறையினர் மேற்கொண்ட பதில் தாக்குதலில் தாக்குதலாளியும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பெல்ஜியம் தலைநகர் புருசெல்ஸ் நகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள லீய்ஜ் நகரின் மத்திய பகுதியில் உள்ள பாடசாலை ஒன்று இருகே இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காவல்துறையினரை சுட்டுக் கொன்ற குறித்த நபர் யார் கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்