160
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோரிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மாகாணசபைத் தேர்தல்களை கூடிய விரைவில் நடத்துமாறு எழுத்து மூலம் கோரக்கை முன்வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். சபரகமுவ, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் பதவிக் காலம் பூர்த்தியாகியுள்ள நிலையில் தேர்தல் முறைமை மாற்றம் செய்யப்படவிருப்பதனால் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love