இலங்கை பிரதான செய்திகள்

மன்னாரில் மனித எலும்புக்கூடுகளை தேடி 3வது நாளாகவும் அகழ்வு – ஊடகவியலாளர்களுக்கு நிபந்தனை :


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் அகழ்வு பணிகள் இன்று(30) புதன் கிழமை 3 ஆவது நாளாக இடம் பெற்று வருகின்ற போதும் இன்று மன்னார் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு அகழ்வு பணிகளின் போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்வதினை அதிகாரிகள் மட்டுப்படுத்தியுள்ளனர்.

‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகம் மற்றும் மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் சேகரிக்கப்பட்ட மண் ஆகியவை கடந்த திங்கட்கிழமை முதல் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் குறித்த இரு இடங்களிலும் ஒரே நேரத்தில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இன்று அகழ்வு பணியினை செய்தி சேகரிக்கச் சென்ற மன்னார் பிராந்திய ஊடகவியலாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்ட போதிலும் அகழ்வு பணிகள் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்ற நேரத்தில் ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுத்தல், மற்றும் வீடியோ பதிவு செய்வதற்கு அங்குள்ள அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை.

-அகழ்வு பணிகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்ட போதே ஊடகவியலாளர்களுக்கு கடமையினை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதனால் உரிய தடைய பொருட்கள் மற்றும் மீட்கப்பட்ட மனித எலும்புகள் தொடர்பில் பதிவுகளை மேற்கொள்ள முடியவில்லை.

மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் காலை 7 மணியளவில் ஆரம்பமான குறித்த அகழ்வு பணியின் போது விசேட சட்ட வைத்திய நிபுனர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர்,கலனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினர், விசேட தடவியல் நிபுனத்துவ பொலிஸார் ,மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களான வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மன்னார் நகரசபை,நில அளவைத்திணைக்களம்,பிரதேச செயலகம்,மாவட்டச் செயலகம், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஆகியவற்றின் பிரதி நிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

-தொடர்ந்தும் இரு இடங்களிலும் அகழ்வுகள் இடம் பெற்ற வருகின்றது.குறித்த அகழ்வகளின் போது மனித எலும்புத்துண்டுகள்,பற்கள் என மனித எச்சங்கள் அதிகலவில் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.