கலிபோர்னியாவின் கிரீன்வுட் பகுதியைச் சேர்ந்த மெலிஸ்சா-மேட் தம்பதியருக்கு இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. எனினும் பிறந்தது முதலே அரிய வகை நரம்பியல் நோயால் இந்தக் குழந்தை பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் குழந்தையை பிட்ஸ்பர்க் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சிகிச்சைகான மருத்துவ செலவை ஈடுசெய்ய முடியாமல் பெற்றோர் மிகவும் சிரமப்பட்ட வேளையில், தம்பியின் மருத்துவ செலவுக்காக தானே பணம் திரட்ட ஒன்பதே வயதான அண்ணன், அண்ட்ரூ மெரி முடிவு செய்துள்ளார்.
இதற்காக வித்தியாசமாக முயற்சி செய்த ஆண்ட்ரூ, எலுமிச்சம்பழ ஜூஸ் தயாரித்து அதை உள்ளூர் நெடுஞ்சாலையோரம் விற்பனை செய்துள்ளார். அத்துடன் தன் தம்பியின் பெயர் அச்சிடப்பட்ட ரீசேட்டுகளையும் விற்பனை செய்துள்ளார். அண்ட்ரூவின் இந்த முயற்சிக்கு குடும்பத்தினர் அனைவரும் உதவி செய்தனர். இதன்மூலம் 2 மணி நேரத்தில் 5 அயிரம் அமெரிக்க டொலர்களை அண்ட்ரூ பணமாக திரட்டினார். அதனை தனது தம்பியின் மருத்துவ செலவுக்கு பயன்படுத்தினார். அவரது பாசம் மிகவும் பாராட்டுக்குரியது என அனைவரும் வியந்துள்ளனர்.