நாளை நடைபெறவிருந்த இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தலுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதி வரை தேர்தலை நடத்துவதற்கு இவ்வாறு தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னர் கிரிக்கெட் சபைத் தேர்தல் மே 19 ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில் அது பிற்போடப்பட்டது. பின்னர் சட்டமா அதிபர் திணைக்களம் விடுத்த உத்தரவை தொடர்ந்து இலங்கையின் விளையாட்டு சட்டத்தின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி விளையாட்டு துறை அமைச்சர் விடுத்த உத்தரவை ஏற்று, மே மாதம் 31 ஆம் திகதி தேர்தல் இடம்பெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்நிலையிலேயே மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.