கட்டுவன் மயிலிட்டி வீதியின் ஒரு பகுதியை தமது பிடியில் வைத்திருக்கும் படையினர், அதனை விடுவிக்கும் நோக்கில் புதிய தடுப்பு வேலியை அமைத்து வருவதாக அறியப்படுகிறது. வலிவடக்கு பிரதேசத்தில் சில பிரதேசங்கள் மக்களின் மீள் குடியமர்விற்காக விடுவிக்கப்பட்ட போதிலும் அவற்றிற்கு செல்லும் முக்கிய வீதிகள் தொடர்ந்தும் படையினரின் கட்டப்பாட்டுள் பேணப்பட்டு வந்தன.
குறிப்பாக கட்டுவன் சந்தியில் இருந்து மயிலிட்டிக்குச் செல்லும் பிரதான வீதியின் சில பமீற்றர் தூரம் விடுவிக்கப்பட்ட போதிலும் பல மீற்றர் தூர வீதி படையினரின் ஆக்கிரம்பிலேயே காணப்பட்டது. இதுகுறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், விடுவிக்கப்பட்ட பகுதிக்குள் மக்கள் இலகுவாக சென்று வர அனுமதிக்கும் வகையில், தமது முட்கம்பி பாதுகாப்பு வேலிகைளை, தற்போதைய நிலைகளில் இருந்து 50 மீற்றர் பின்னோக்கி நகர்த்தும் நடவடிக்கைகளை படையினர் ஆரம்பித்துள்ளனர்.
இதன் மூலம் படையினரின் கட்டப்பாட்டில் உள்ள 450 மீற்றர் நீளமான வீததி விடுவிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.