148
அன்புடையீர்,
அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம், சட்டத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சமகால சட்ட விடயங்களுக்காக அரங்கத்தோடு இணைந்து நாளை 01 ஜூன் 2018 அன்று ‘தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை: முழுமையான சட்டக் கொள்கை நிலைப்பாட்டை நோக்கி’ எனும் தலைப்பில் ஓர் கலந்துரையாடலை ஒழுங்கு செய்துள்ளது.
அண்மையில் அடையாளம் இது தொடர்பில் வெளியிட்ட அறிக்கையை ஒட்டி பிரதான உரையை அடையாளத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் யாழ் பல்கலைக்கழக சட்டத் துறைத் தலைவருமான குமாரவடிவேல் குருபரன் வழங்குவார்.
பிரதான பதிலுரையை அருட்பணி ம. சக்திவேல், அழைப்பாளர், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கம் வழங்குவார்.
இடம்: அறை இலக்கம் 207, கலைப் பீடம், யாழ் பல்கலைக்கழகம்
01 ஜூன் 2018, நேரம்: 2 மணி முதல் 4 மணி வரை
இம்முக்கிய கலந்துரையாடலில் உங்கள் பங்குபற்றலையும் கருத்துக்களையும் அடையாளம் வேண்டி நிற்கின்றது
நன்றி
குருபரன்
Spread the love