171
தேசிய ஒருமைப்பாடு,மற்றும் நல்லிணக்க அமைச்சு… குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – கிளிநொச்சி..
தேசிய ஒருமைப்பாடு,மற்றும் நல்லிணக்க அமைச்சின் 1500 மில்லியன் ரூபா டி செலவில் முறிகண்டி கனகபுரம் ( டூப்ளிகேசன்) வீதி புனரமைக்கப்படவுள்ளது என அன்மையில் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி ஏ9 வீதிக்கு சமாந்தரமாக முறிகண்டியில் ஆரம்பித்து பொன்னகர், மலையாளபுரம், அம்பாள்குளம், ஊடாக டிப்போ கனகபுரம் வீதி வரை முதற்கட்டமாக புனரமைக்கப்படவுள்ளது.
குறித்த வீதியானது முறிகண்டியிலிருந்து பரந்தன் பூநகரி வீதியை இணைக்கும் வகையில் 2009 ககு முன்னரே திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டு அந்த வீதியினை அடிப்படையாக கொண்டே பல்கலைகழகமும் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் மீள்குடியேற்றத்திற்கு பின்னர் பல்கலைகழக நகர மயமாக்கல் திட்டம், மற்றும் “ஜ றோட்” திட்டத்திற்குள்ளும் குறித்த வீதியானது உள்வாங்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த திட்டங்கள் மூலம் புனரமைப்பு மேற்கொள்ளப்படாத நிலையில்
தற்போது தேசிய ஒருமைப்பாடு,மற்றும் நல்லிணக்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதற்கட்டமாக முறிகண்டி தொடக்கம் கனகபுரம் டிப்போ வீதி வரை புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love