153
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – யாழ்ப்பாணம்..
நல்லூர் ஆலயத்திற்கு அருகில் பௌத்த விகாரை அமைய போகும் காலம் வெகு தொலைவில் இல்லை என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 123 ஆவது அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை கைதடியில் உள்ள மாகாண பேரவை செயலக கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
முல்லைத்தீவு மாவட்ட கொக்கிளாய் நாயாறு பகுதிகளில் சிங்கள மீனவர்கள் அடாத்தாக வாடிகள் அமைத்து தங்கி இருந்து , சட்டவிரோதமான மீன் பிடிமுறமைகள் மூலம் மீன் பிடியில் ஈடுபடுகிறார்கள் என இந்த சபையில் மூன்று வருடங்களுக்கு மேலாக கூறி வருகின்றேன்.
அது தொடர்பில் மத்திய மீன் பிடி அமைச்சராக அப்போதிருந்த மஹிந்த அமரவீரவிடம் நேரில் கூட அது தொடர்பில் முறையிட்டு உள்ளோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இது வரை எடுக்கப்படவில்லை.
கொக்கிளாய் பகுதிகளில் தொடங்கிய ஆக்கிரமிப்பு நாயாறு , சாலை சுண்டிக்குளம் தாண்டி தற்போது யாழ்.மாவட்டம் மருதங்கேணி வரை தொடர்கின்றது. ஆனால் அதனை தடுக்க முடியாத நிலையில் நாம் இருக்கின்றோம். இவ்வாறே சென்றால் நல்லூர் முருகன் ஆலயத்திற்கு அருகில் பௌத்த விகாரை அமையும் காலம் வெகு விரைவில் இல்லை என்றே தோன்றுகின்றது என தெரிவித்தார்
Spread the love