குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழக அகதி முகாமில் இருந்து சட்ட விரோதமாக படகு மூலம் தலைமன்னார் கடற்பகுதியூடாக மன்னாரை வந்தடைந்த இரு சிறுவர்கள் உட்பட 6 பேரையும் எதிர் வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா இன்று வியாழக்கிழமை(31) மாலை உத்தரவிட்டுள்ளார்.
நேற்று புதன் கிழமை (30) இரவு தமிழக அகதி முகாமில் இருந்து குறித்த 6 பேரும் படகு ஒன்றின் மூலம் இலங்கையின் தலைமன்னார் பகுதியை நோக்கி வருகை தந்தநிலையில் மண் திட்டியில் படகோட்டியினால் இறக்கி விடப்பட்ட நிலையில் கடற்டையினர் கைது செய்து கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து விசாரணைகளின் பின்னர் இன்று (31) வியாழக்கிழமை மாலை மன்னார் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் 4 பேரையும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதோடு, இரு சிறுவர்களையும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை சிறுவர் காப்பகத்தில் அனுமதிக்குமாறும் உத்தரவிட்டார். கைது செய்யப்பட்டவர்கள் பேசாலை,அடம்பன் மற்றும் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் என தெரிய வருகின்றது